

‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் தமிழ் நாடக விழா சென்னையில் வரும் 17-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன.
சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள நாரதகான சபாவில் ‘தி இந்து’ நடத்தும் தமிழ் நாடக விழா வரும் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளன்று திருவாசகத்தை தழுவிய ‘வடுவூரான்’ என்ற நாடகம் நடக்கிறது.
18-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர் சோ. ராமசாமி 1970-ம் ஆண்டு எழுதிய ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ நாடகம் நடைபெறுகிறது. அதே நாளில் இரவு 7 மணிக்கு ஒய்.ஜி. மகேந்திரனின் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் நடக்கிறது.
நிறைவு நாளான 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எழுத்தாளர் சுஜாதாவின் அறிவியல் கதைக் களத்தை மையமாகக் கொண்ட ‘கடவுள் வந்திருந்தார்’ என்ற நாடகமும், மாலை 4 மணிக்கு இயக்குநர் கிரேஸி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகமும், இரவு 7 மணிக்கு திரைப்பட இயக்குநர் விசுவின் ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகமும் நடக்கின்றன.
மூன்று நாட்களும் நடக்கும் அனைத்து நாடகங்களையும் பார்க்க நுழைவுக் கட்டணம் ரூ.500 முதல் ரூ.2,400 வரை. நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டணம். நுழைவுக் கட்டணம் மற்றும் நாடகங்கள் தொடர்பான தகவல்களை www.thehindu.com/tnv201, www.bookmyshow.com, www.indianstage.in, www.madrasevent.in, www.eventjini.com ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.