ஆள்மாறாட்டம், போலி கையெழுத்திட்டு ரூ.1 கோடி மதிப்பு நிலத்தை மோசடியாக விற்றவர் கைது

ஆள்மாறாட்டம், போலி கையெழுத்திட்டு ரூ.1 கோடி மதிப்பு நிலத்தை மோசடியாக விற்றவர் கைது
Updated on
1 min read

செங்குன்றம் அருகே போலி ஆவணம் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்குன்றம் அருகே உள்ள ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். கடந்த 2007-ம் ஆண்டு காலமாகிவிட்டார். அதே பகுதியில் அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் 78 சென்ட் நிலத்தை பராமரிக்க மற்றும் விற்பனை செய்வதற்கான பொது அதிகாரத்தை, செங்குன்றம் அருகே உள்ள மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த சாதிக் என்பவருக்கு அப்பாஸின் வாரிசுகளான பாட்டூன், முகமது உள்ளிட்ட 5 பேரும் வழங்கினர்.

இச்சூழலில் சாதிக் பொது அதிகாரம் பெற்ற நிலத்தின் ஒரு பகுதியான 2 ஏக்கர் 30 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்டது தெரி யவந்தது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிலத்தை, எண் ணூரைச் சேர்ந்த சையத் உசேன் என்பவர் நிலத்தின் உரிமை யாளரான அப்பாஸ் என ஆள் மாற்றாட்டம் செய்து, போலி கையெழுத்து போட்டு கடந்த 2014, மார்ச் 12-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மேலாண்டை வீதியைச் சேர்ந்த புஷ்பராஜ்க்கு நிலத்தை விற்பனை செய்வதற்கான பொது அதிகாரம் வழங்கியுள்ளார்.

இந்த நிலத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 0.79 சென்ட் நிலத்தை சென்னை அருகே உள்ள கோணிமேடு பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு 2014 ஏப்ரல் 2-ம் தேதி புஷ்பராஜ் விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் புஷ்பராஜை கைது செய்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in