

பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட் டத்தில் திரளான பக்தர்கள் பங் கேற்று ‘அரோகரா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா பிப். 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு பகுதி களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழநி வந்து சுவாமியை வழிபட்டனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடை பெற்றது. முன்னதாக, நேற்று காலை 6 மணிக்கு சண்முக நதியில் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் முன் தேரில் வள்ளி, தெய்வ நாயகியம்மன் சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தரு ளினார். அங்கு சுவாமிக்கு அபி ஷேக, ஆராதனைகள் நடை பெற்றன.
மாலை 4.45 மணிக்கு தேரோட் டம் தொடங்கியது. திரளான பக்தர் கள் வடம் பிடித்து இழுக்கத் தொடங் கினர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்தது. வழிநெடுகிலும் மக்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் நிலையை அடைந்த பின் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்ட நிகழ்ச்சியில் திண்டுக் கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சேகர்தேஷ்முக், கோயில் இணை ஆணையர் க.ராஜமாணிக் கம், பழநி எம்எல்ஏ இ.பெ.செந் தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.