

சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு இணை ஒருங் கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தீர்மானித்தது. கடந்த ஆண்டு ரூ.1,551 கோடியாக இருந்த உருக்காலையின் வரவு இந்த ஆண்டு ரூ.1,850 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2015 டிசம்பரில் ரூ.140 கோடியாக இருந்த நஷ்டம் கடந்த 2016 டிசம்பரில் ரூ.12 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. உருக் காலை லாபத்தில் இயங்கு வதற்கான அனைத்து வாய்ப்பு களும் உள்ளன.
உருக்காலையில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள் ளது. 4,000 ஏக்கரில் செயல் படும் உருக்காலையால் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்காக சட்ட ஆலோ சகர், சொத்து மதிப்பீட்டாளர், தனியார்மயத்தை நிறைவேற்று வதற்கான ஆலோசகர் ஆகி யோரை நியமனம் செய்வதற்கு ஏப்ரல் 3-ம் தேதி டெண்டரை அறிவித்து, அதேநாளில் டெண்டர் திறக்கப்படும் என நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைக் கண்டித்து வரும் 13-ம் சேலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதமும், மார்ச் 3-வது வாரம் மறியலும், ஏப்ரல் 3-ம் தேதி வேலைநிறுத்தமும் நடைபெறும். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.