மத்திய அரசு நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்
Updated on
1 min read

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர் டிஓ) 233 விஞ்ஞானி, இன்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏரோநாட் டிக்கல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இந்த காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ஆன்லைனில் (>www.ras.gov.in) விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங் களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல், ரிசர்வ் வங்கியின் சார்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் நிறுவனத்தில் 120 தொழில்நுட்ப பணியாளர் (பயிற்சி) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமா படித்த வர்கள் இதற்கு விண்ணப்பிக்க லாம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். ஜூலை 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் (>www.brbnmpl.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏரோநாடிக்கல் குவாலிட்டி அஷ்யூ ரன்ஸ் நிறுவனத்தில் 60 முது நிலை அறிவியல் உதவியாளர் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் கல், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக் கல், உலோகவியல்) பணியிடங் களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபி எஸ்சி) அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இதற்கு ஜூலை 28-க்குள் ஆன்லைனில் (>www.upsconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in