கோவை அரசு மருத்துவமனையில் கால் எலும்பு சிகிச்சைக்கு வந்தவருக்கு சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை?

கோவை அரசு மருத்துவமனையில் கால் எலும்பு சிகிச்சைக்கு வந்தவருக்கு சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை?
Updated on
2 min read

கால் எலும்புமுறிவு அறுவைச் சிகிச்சைக்கு வந்த முதியவருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மனைவி புகார் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசியூர் அழுக்குகுழி யைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). மனைவி லட்சுமி (64). இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

ஒரு விபத்தில் ஆறுமுகத்தின் இடது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிளேட் பொருத்தப் பட்டது. பிளேட்டை அகற்றுவதற் காக கடந்த 10-ம் தேதி எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டார். 15-ம் தேதி, பிளேட்டை அகற்ற அறுவைச்சிகிச்சை அரங் குக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பல்வேறு அறுவைச் சிகிச்சைக்காக 12 பேர் சென்றுள் ளனர். அதில் ஆறுமுகம் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர்.

ஆறுமுகம் என்ற பெயரில் இருந்த மற்றொருவர் சிறுநீரக பழுது சிகிச்சைக்காக காத்திருந் துள்ளார். அப்போது, அறுவைச் சிகிச்சைக்காக ஆறுமுகம் என்ற பெயரைக் கூறி மருத்துவ ஊழியர்கள் அழைத்துள்ளனர். தன்னைத்தான் கூப்பிடுகிறார்கள் என நினைத்து எலும்புமுறிவு சிகிச்சைக்கு காத்திருந்த ஆறு முகம் உள்ளே சென்றுள்ளார். சிறுநீரகம் பழுது நீக்குவது தொடர்பான அறுவைச் சிகிச் சையை டாக்டர்கள் அவருக்கு மேற்கொண்டதாகத் தெரிகிறது.

காலில் ஏற்பட்ட முறிவுக்கு ஏன் கையில் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள் என நினைத்து, டாக்டர்களிடம் தான் எதற் காக வந்தேன் என்பதை ஆறுமுகம் கூறியுள்ளார். அதன் பின்னரே, தவறு நடந்துள்ளதை மருத்துவர்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து, அந்த அறுவைச் சிகிச்சையை பாதியுடன் நிறுத்தி விட்டு, திரும்பவும் எலும்புமுறிவு அறுவைச்சிகிச்சை வார்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, ஒருநாள் கழித்து அவருக்கு, பிளேட் நீக்கும் அறுவைச்சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி லட்சுமி கூறியது:

எங்களுக்கு குழந்தை இல்லை. உழைத்தால்தான் சாப்பிட முடியும். காலில் வைத்த கம்பியை எடுக்க இங்கு வந்து 7 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இடையில் ஒரு நாள் கூட்டிச் சென்று இடது கையில் ஆபரேஷன் செய்துவிட்டார்கள். ஆபரேஷன் முடித்து நான் என்னவென்று கேட்டபோது இன்னும் ஒருநாள் மட்டும் இருக்க வேண்டும் என கூறினார்கள், தெளிவாகச் சொல்லவில்லை. இப்போது, அவரது இடது கை கட்டை விரலில் உணர்வு இல்லை. கையை மடக்க முடியாமல் சிரமப் படுகிறார். இங்கு, தொடர்ந்து தங்கி இருப்பதற்கு பணமும் இல்லை. வெளியில் வாங்கித்தான் சாப்பிட்டு வருகிறோம். மிகவும் சிரமமாக இருக்கிறது என அழுத படியே கூறினார்.

இது தொடர்பாக மருத்துவ மனை முதல்வர் எஸ்.ரேவதியிடம் கேட்டபோது, சிகிச்சை குறித்து அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அழைத்து விசாரித்தேன்.

சிறுநீரகம் அறுவைச் சிகிச்சை நடந்த பிரிவில், ஆபரேஷன் தியேட்டர் காலியாக இருந்ததால் சம்பந்தப்பட்டவரை அங்கு வைத்து சிகிச்சை அளித் துள்ளனர். வேறு எந்த தவறும் நடக்கவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in