

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4- ஆம் தேதியன்று நடை பெறவுள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சரோஜா களமிறக்கப்பட்டுளார். இந்நிலையில், நவ.28-ல் முதல்வர் ஜெயலலிதா, ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
ஏற்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வருகிற 28–ஆம் தேதி (வியாழக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
மின்னாம் பள்ளி, (வழி– காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம். பெருமாபாளையம், டோல்கேட், வெள்ளாள குண்டம் பிரிவு, (வழி– காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு), வாழப்பாடி பேருந்து நிலையம், (வழி – பேளூர் சாலை பிரிவு, துக்கியாம் பாளையம், அத்தனூர்பட்டி), பேளூர் கருமந்துறை பிரிவு ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், (வழி–பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)நீர் முள்ளிக்குட்டை, (வழி– ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)கூட்டாத் துப்பட்டி, (வழி– சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம் பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)பேசும் இடம்: வலசையூர், (வழி–ராமர்கோவில்)பேசும் இடம்: அயோத் தியாப்பட்டினம், உடையாப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.