

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் தரப்பினர் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.
இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த னர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக போலீஸார் பதில் மனு தாக்கல் செய்யவும், அது வரை அவர்கள் இருவரையும் கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை யடுத்து, ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓ.ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் ஏப்ரல் 17 வரை நீ்ட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல தேசி யக் கொடியை அவமரியாதை செய்த தாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கில் முன்ஜாமீன் கோரி மாஃபா பாண்டிய ராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த மனுவும் நீதிபதி எஸ்.பாஸ் கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கும் பதிலளிக்க போலீஸ் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து விசார ணையை நீதிபதி வரும் 18-க்கு தள்ளி வைத்தார். அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அதற்குள் எதுவும் நடந்து விடாது என்றார்.