கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
Updated on
1 min read

தமிழக - கேரள எல்லையில் அமைந் துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா வில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

குமுளி அருகே 14 கி.மீ., தொலைவில் தமிழக - கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக, கேரள மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 5 மணிக்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் 6 மணிக்கு இரு மாநில பக்தர்கள் செல்லத் தொடங்கினர்.

பீடி, சிகரெட், போதை பொருட்கள் மற்றும் அசைவ உணவு பொருட்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டது. குடிநீருக்காக 5 லிட்டர் கேன்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், தங்களது செல்லப் பிராணிகளைக் கொண்டுசெல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கேரள வனத்துறையினர் 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கடும் சோதனையில் ஈடுபட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

குமுளியில் இருந்து கோயில் வரை உள்ள சுமார் 14 கி.மீ. தூரம் உள்ள சாலை சீரமைக்கப் படாததால் குண்டும் குழியுமாகக் காணப்பட்டதுடன், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் பளியங்குடி வழி யாக நடந்துசென்ற பக்தர்கள் நனைந்துகொண்டே சென்றனர். தேனி, திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட் டன.

அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்காக தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். பாதுகாப்புப் பணியில் இரு மாநில காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in