

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அவரது தந்தை சங்கரநாராயணனின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க சிறை நிர்வாகம் அனுமதி தர மறுத்ததால், கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘நளினி தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 3 நாள் பரோலில் அனுப்ப அனு மதிக்க வேண்டும் என்று நளினியின் தாய் பத்மா கடந்த வியாழக்கிழமை மனு அளித்தார். அதன் மீது நட வடிக்கை எடுக்கவில்லை என் பதால் நளினி வருத்தத்தில் இருந்தார். உண்ணாவிரதம் ஏதும் இருக்க வில்லை’’ என்றனர்.