

கபாலி படத்துக்கு 10 இலவச டிக்கெட் தரக் கோரி தியேட்டர் நிர்வாகத்துக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்த தமிழக செய்தித் துறை அமைச்சரின் மூத்த நேர்முக உதவியாளர் நேற்று அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கபாலி படம் நேற்று ரிலீ்ஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்கு 10 இலவச டிக்கெட்களை ரிஸ்வான் என்பவரிடம் வழங்கக் கோரி தமிழக செய்தித் துறை அமைச்சரின் மூத்த நேர்முக உதவியாளரான பிரேம்குமார், தியேட்டர் நிர்வாகத்துக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் நேற்று அவர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.