சிப்காட் ஆலை தீ விபத்து: அமைச்சர்கள் விளக்கம்

சிப்காட் ஆலை தீ விபத்து: அமைச்சர்கள் விளக்கம்
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் ஏற் பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரை முருகன் (காட்பாடி) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையை அடுத்து அமைந் துள்ள சிப்காட் தொழிற்பேட்டை யில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ரசாயன தொழிற் சாலை நடத்தி வருகிறார். தொழிற் சாலை கழிவுகளை மறுசுழற்சி மூலம் பவுடராக்கி சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருளாக அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இத்தொழிற்சாலையில் ஜன. 30 அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வண்டிகளும், 40 வீரர்களும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ராணிப் பேட்டை நகராட்சி, வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தீவிபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுற்றுப்புற பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ‘‘ராணிப் பேட்டை சிப்காட்டில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக் கும் பணியில் தீயணைப்பு வண்டி கள், தண்ணீர் லாரிகள், மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in