

சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்படு வதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதிநாளான நேற்று நிதி,பொது, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாத முடிவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து, 2005-06 முதல் 2011-12-ம் நிதியாண்டுகள் வரையிலான 7 நிதியாண்டுகளில் துறைகளுக்கான மிகை செலவினங் களுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடந்தது.
தொடர்ந்து, பொதுத்துறை, நிதித் துறை உள்ளிட்ட 7 துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் நிறைவேற் றப்பட்டன. அதன்பின், நிதி ஒதுக்க சட்ட முன்வடிவுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய் தார். பின்னர் அவை ஆய்வு செய்யப் பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப் புடைமை திருத்த சட்ட முன்வடிவு, நகராட்சிகள்,மாநகராட்சிகள், கவின் கலைப் பல்கலைக்கழக சட்டத் திருத்த முன்வடிவுகள் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக பேரவையை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பதற் கான தீர்மானத்தை அவை முன்ன வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித் தார். இந்த தீர்மானம் குரல் வாக் கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரவை கூட்டம் நிறைவு பெற்றதாக வும், பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.