

கிராம நிர்வாகத்துறை என்ற துறையை உருவாக்குவதுடன், புதிய கிராம நிர்வாக அலுவலர் களை நியமிக்கும் முன், ஏற்கெனவே உள்ளவர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் கவுரவ தலைவர் கி.வெங்கடேசன், நிர்வாக குழு தலைவர் சீ.சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கூறியதா வது: கடந்த 1984-ல் சங்கம் தொடங் கப்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த சங்கத் தின் மாநில பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. அதில், கிராம நிர்வாக அலுவலர்களில் 30% பேருக்கு பதவி உயர்வு அளித் ததற்கு அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் வெளியிட வேண்டும். கடந்த 14-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அறிக்கை வெளியிட்ட ஆர்.போஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறையில் இருந்து தனியாக கிராம நிர்வாக துறை என்ற துறையை உருவாக்க வேண்டும். புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனத்துக்கு முன் தற்போதுள்ளவர்களுக்கு சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. மேலும், மாநில நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் செப்டம்பர் 3-ம் தேதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.