

ராம மோகன ராவ் நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிப்பார், இல்லை என்றால் கைது செய்யப்படுவார் என்றிருந்த நிலையில் திடீரென நேற்று பேட்டி அளித்தார்.
இது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. இன்று வருகிறோம்... நாளை வருகி றோம்... என்று தூது அனுப்பி வந்தவர்கள் திடீரென எதிராக செயல்பட்டதை வருமான வரித்துறை அதிகாரிகள் எதிர் பார்க்கவில்லை.
இதைத் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று இரவு வருமான வரித் துறை அதிகாரிகள் ஆலோசித் துள்ளனர். அப்போது, விவேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான விசாரணையை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.