கோடநாடு காவலாளி கொலை வழக்கு: 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதானவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாட் டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் சமி, மனோஜ், ஜம்சீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோருக்கு ஜாமீன் கோரி உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப் பட்டது. ‘கைது செய்யப்பட்ட 4 பேரும் கோடநாடு எஸ்டேட்டுக்கு பூஜை செய்ய அடிக்கடி வருவதாக வும், இவர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள் ளதாகவும்’ மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், தெரிவித்த னர். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, மனு மீதான விசா ரணையை மாலைக்கு ஒத்தி வைத்தார். மாலையில், 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
