Published : 05 Aug 2016 08:29 AM
Last Updated : 05 Aug 2016 08:29 AM

ஆலந்தூர் தில்லை கங்கா நகரில் ரூ.85 கோடியில் உயர்மட்ட சாலை மேம்பாலம்

சென்னை ஆலந்தூர் தில்லை கங்கா நகரில் ரூ.85 கோடியில் உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நெடுஞ் சாலை, சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதிலளித்து துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 49,598 கி.மீ. சாலை கள், 884 பாலங்கள், 55 ரயில்வே மேம்பாலங்கள், 13 புறவழிச் சாலை கள் ரூ.22,980.35 கோடியில் மேம் படுத்தப்பட்டுள்ளன. ரூ.11,367.52 கோடிக்கான பணிகள் நடக்கின்றன. ‘தொலைநோக்குத் திட்டம் 2023’ன் கீழ், 1,335 கி.மீ. நீளமுள்ள செங்கல்பட்டு - தூத்துக்குடி- கோவை முக்கோண சாலைகளை 6, 8 வழித்தடமாக்குதல், 2,511 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம் படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது.

10 நகரங்களுக்கு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 37 நகரங்களில் நிலம் கையகப் படுத்தும் பணிகள் நடக்கின்றன. பல்வேறு திட்டங்களின் கீழ் 292 ரயில்வே கிராசிங்குகளில் சாலை மேம்பாலங்கள், கீழ்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 1,301 ஆள் உள்ள மற்றும் 695 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் படிப்படியாக மேம் பாலம், கீழ்பாலங்களாக மாற்றப் படும்.

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 250 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ் சாலைத் துறை பராமரிப்பில் உள்ளன. இதில் ரூ.1,033 கோடி யில் மேம்படுத்த பணிகள் கண்டறியப் பட்டுள்ளன. ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, நீலாங்கரையில் 2 சாலைகளையும் இணைக்கும் புதிய சாலை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே 2 கி.மீ. நீளத்தில் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த 3 பாலங்கள் ரூ.64 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். சென்னை ஆலந்தூர் தில்லை கங்கா நகரில் வாகன சுரங்கப் பாதைக்கு கூடுதலாக ரூ.85 கோடியில் உயர்மட்ட சாலை மேம்பாலம், கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை உயர் மட்ட பாலம், தஞ்சையில் காவிரி, வெண்ணாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலங்களுக்கு மாற்றாக ரூ.32 கோடியில் புதிய பாலங்கள், கோபியில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.13 கோடியில் பழைய இரும்பு பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம், விழுப்புரம் - கடலூரை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற் றின் குறுக்கே ரூ.38 கோடியில் புதிய பாலம் கட்டப்படும். ரயில்வே திட்டப்பணிகளின் கீழ் 13 ரயில்வே கீழ், மேம்பாலங்கள் ரூ.749.88 கோடி யில் கட்டப்படும்.

கோவை - மேட்டுப்பாளையம் இணைப்பு சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.21.50 கோடியில் மேற் கொள்ளப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாலைகள், சுரங்கப் பாதை களில் மழைநீரை துரிதமாக வெளியேற்ற மின்மோட்டார் மற்றும் தேவையான சிறுபாலங்கள், வடிகால் வசதிகள் ரூ.31.25 கோடி யில் உடனே ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x