

பெரம்பூரில் உள்ள மின் வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெரம்பூரில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் (இயக்குதலும் பராமரிப்பும்) அலுவலகம் தற்போது குக்ஸ் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம், நிர்வாக காரணங்களால், எண். 50, குக்ஸ் சாலை, (பின்னி மில், பின்புற கேட்) விலாசத்தில் நாளை (30-ம் தேதி) முதல் இயங்கும். மின் கட்டணம் வசூலிக்கும் மையம், 47, மலையப்பன் தெருவில் உள்ள பழைய வளாகத்திலேயே வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.