Published : 03 Jan 2016 12:51 PM
Last Updated : 03 Jan 2016 12:51 PM

தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாறவேண்டும்: நீர் மனிதர் ராஜேந்திர சிங்

நீர்வள சேமிப்பு மற்றும் நீர்நிலை கள் பாதுகாப்புக்காக பல்வேறு பணிகளை செய்து வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேந்திர சிங். இந்தியாவின் ‘நீர் மனி தர்’ என போற்றப்படும் இவர், ‘யாதும் ஊரே’ திட்ட தொடக்க விழாவில் பேசியதாவது:

சென்னைக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த போதே, நீல வெப்பம், சிவப்பு வெப்பம் போன்ற அறிவியல் மாற் றங்களை உணர்ந்தேன். இத னால், சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நீர்நிலைகளை பராமரிக்க முயற்சி எடுங்கள் என்றும் சென் னைவாழ் நண்பர்களிடம் கூறி னேன். அது இன்றைய சூழலில் சாத்தியமாகாது என்றனர்.

நீதிமன்றங்களை அணுகி, ஊராட்சி முதல் மாநகராட்சி வரை உள்ள அனைத்து நீர்நிலைகளை யும் கணக்கெடுத்து அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றேன். நான் கூறிய சில ஆண்டுகளில் சென்னை வெள்ளத்தில் தத்தளித்துள்ளது.

இனியாவது ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புக்கு காரணமான ரியல் எஸ்டேட் ஆட்கள், அரசியல் வாதிகளுக்கு எதிராக நீதிமன்றங் களில் வழக்கு தொடர வேண் டும். சென்னை மட்டுமின்றி தமிழ கத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். முன்பு மழை பெய்த போது அவை எப்படி நீரை உள் வாங்கின, இப்போது நிலைமை எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும். தமிழக நீர்நிலைகளை காப்பாற்றுவது மக்கள் இயக்க மாக மாறவேண்டும். நான் இதற்கு உறுதுணையாக இருப்பேன்.

வெள்ள பாதிப்புகளுக்கு பருவ நிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், நவீனமயமாதல் என 3 காரணங்களை சொல்ல முடியும். ராஜஸ்தானில் மழை பெய்த அடுத்த சில மணி நேரத்திலேயே தண்ணீர் வற்றிவிடும். இதுபற்றி ஆய்வு செய்தபோது, 24 மணி நேரத்தில் 10 சதவீத மழை நீரை சூரியன் உறிஞ்சிவிடுவது தெரியவந்தது. இதற்கு பிறகுதான் நீர்நிலைகளை உருவாக்கவும், மழைநீரை சேகரிக்கவும் திட்டங் களை வகுத்தோம்.

எனவே, தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய நாம் திட்டங்களை வகுக்க வேண்டும். இதற்கான பணிகளை அரசு செயல் படுத்த வேண்டும். எந்த பேதமு மின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, இனி வரும் காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இன்றுமுதல் செயலாற்ற வேண்டும். இவ்வாறு ராஜேந்திர சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x