

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெயரில் போலியாக கடிதம் வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி அதிமுக ஐ.டி. பிரிவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெயரில் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தமிழக ஆளுநருக்கு எழுதப்பட்டிருப்பதுபோல இருந்த அந்தக் கடிதத்தில், ‘விரைவில் என்னை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், எனது சாவுக்கு நீங்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கூறப்பட்டிருந்தது. இது சசிகலா ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த கடிதத்தை நிருபர்களிடம் காட்டி, ‘இதுபோன்ற செயல்களை செய்பவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும்’ என சசிகலா கூறியிருந்தார். இந்நிலையில், சசிகலா பெயரில் போலியாக கடிதத்தை தயாரித்து பரவ விட்டவர்களைக் கண்டுபி
டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அதிமுக ஐ.டி. பிரிவு சார்பில் சென்னை
பெருநகர காவல் ஆணையர் அலுவலகத் தில் நேற்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.