

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் ப.மதிவாணன் கடந்த சில வாரங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரு கிறார். காலையில் நடைபயணம் மூலமும், மாலையில் பிரச்சார வாகனம் மூலமும் அவர் பிரச் சாரம் மேற்கொண்டு வருகிறார்.
வேட்பாளர் ப.மதிவாணன் மற்றும் தனது ஆதரவாளர்களு டன் தண்டையார்பேட்டையில் குமரன் நகர், ராஜாஜி நகர் பகுதி யில் முரசு கொட்டிக்கொண்டே நடைபயணம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆர்.கே.நகர் தொகுதி மேம்பாட்டுக்காக வகுத் துள்ள திட்டப்பணிகள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தார்.