Published : 15 Jul 2016 09:38 AM
Last Updated : 15 Jul 2016 09:38 AM

திருப்பூரில் பிடிபட்ட கேரள இளைஞர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?- மத்திய உளவுத்துறை விசாரணை

கேரளாவைச் சேர்ந்த இளை ஞர்கள் 2 பேர் திருப்பூரில் பிடிபட்டனர். அவர்கள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா என மத்திய உளவுத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் தரப் பில் கூறியதாவது:

கேரளாவில் கடந்த மாதம் 6 பெண்கள் உட்பட 21 பேர் காணாமல் போனதாகவும், ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டதாக வும் , தகவல் பரவி வந்த நிலையில் இப்பிரச்சினை கேரள சட்டப் பே ரவையிலும் விவாதத்தை எழுப் பியது.

போலீஸார் விசாரணை

இந்நிலையில், திருப்பூர் அனுப் பர்பாளையம் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது சமீர்(19), சல்மான்(19) ஆகியோர் தங்கியிருந்ததை, பாலக்காடு பட்டாம்பி போலீஸார் கண்டறிந் தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் அங்கிருந்து வந்த தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸாருக்கும் தகவல் அளிக் கப்பட்டது.

போலீஸார் விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாக திருப்பூருக்கு வந்து தங்கி யிருந் து, பின்னலாடை நிறுவனத் தில் கடந்த 20 நாட்களாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

திருப்பூரில் 6 ஆண்டுகள் தங்கி யிருந்த மொஷிருதின் என்பவர் ஐஎஸ் அமைப்பு டன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி பிடிபட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்த 2 பேர் பிடிபட்டது குறித்தும், அவர்கள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்தும், மத்திய உளவுத்துறை போலீஸார் ரகசியமாக விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

போதைக்கு அடிமை

பாலக்காடு பட்டாம்பி போலீஸார் ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘கேரளாவில் காணாமல் போனவர்களைத் தேடி வந்த போ து, திருப்பூரில் தங்கியிருந்த 2 பேர் பற்றி தகவல் கிடைத் த து.

இவர்களுக்கும், கேரளா வில் தேடப்படும் 21 பேருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு ஓடி வந்ததும், இவர்கள் போதைப் பழக்கத்தும் அடிமையானதும் தெரியவந்தது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x