

"ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா. அவரே தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்" என அதிமுக மூத்த தலைவர் செம்மலை கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.
இன்று (புதன்கிழமை) அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் செம்மலை கூறும்போது, "ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா. அவரே தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். சசிகலாவுக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. அவர் நல்லாட்சி செலுத்துவார். சசிகலாவின் கடிதம் மீது ஆளுநர் முடிவெடுப்பார்" என்றார்.