சிதம்பரத்தில் மூலிகை தோட்டமாக மாறிய அரசு சித்த மருத்துவமனை

சிதம்பரத்தில் மூலிகை தோட்டமாக மாறிய அரசு சித்த மருத்துவமனை
Updated on
1 min read

சிதம்பரம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவைச் சுற்றிலும் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு செயல்பட்டு வரு கிறது. இந்தப் பிரிவுக்கு நோயாளிகள் வந்து மருத்து, தைலங்கள், மூலிகைப் பொடிகள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.

இந்தப்பிரிவு மருத்துவமனை போல இல்லாமல் இயற்கையாக அமைந்த பூங்கா போல மாற்றப்பட்டிருக்கிறது. மருத்துவ குணம் கொண்ட செடிகள் மற்றும் மரங்களை கொண்டதாக உள்ளது. சித்த மருத்துவ மனை நிர்வாகத்தினர் இந்தப் பிரிவுக்கு முன்பகுதியில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்துள்னர்.

இங்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அமருவதற்கு சிமெண்டிலான உட்காரும் இருக்கைகளும் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள், நோயாளி கள் அதில் அமர்ந்து மூலிகை குணம் கொண்ட காற்றை சுவாசித்து ரிலாக்ஸாக செல்கின்றனர்.

இந்த சித்த மருத்துவ பூங்காவில் கீழாநெல்லி, வாழை, அருநெல்லி, மருதாணி, அரளி, நாவல், துளசி, பப்பாளி, நித்தியக் கல்யாணி, செம்பருத்தி, மருதம், அத்தி, பெரியாநங்கை, ஆடாதோடை, பிரண்டை, கரிசலாங்கண்ணி, திருநீற்றுப்பச்சிலை, செண்டுமல்லி, பவளமல்லி, அருகம்புல் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் வைக்கப்ப்டடுள்ளன. இங்கு வரும் நோயளிகள் இந்த மூலிகை செடிகளை பார்த்து அதன் பெயர்களை ஆர்வத்துடன் குறித்து கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் சித்த மருத்துவர் அர்ச்சுணன் கூறுகையில், “மருத்துவமனை என்பது நோயாளிகளை மகிழ்விக்கும் இடமாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் சித்த மருத்துவப்பிரிவில் மருத்துவ குணம் கொண்ட பல்வேறு மூலிகை செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து வரு கிறோம்.

பலருக்கு மூலிகை செடிகளில் பெயர் தெரிந்தும் அது எப்படி இருக்கும் என்று தெரிவதில்லை. அதை தெரிந்து கொள்ளும் வகையில் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு செடியிலும் அதன் பெயரை எழுதி வைத்துள்ளோம்.'' என்றார். இதுகுறித்து சித்த மருத்துவப் பிரிவுக்கு வந்திருந்த கண்ணன் என்பவரிடம் கேட்ட போது, ''நித்தியக்கல்யாணி செடி எப்படி இருக்கும் என்பதை இங்குள்ள மூலிகை தோட்டத்தில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன். இதுபோல பல மூலிகை செடிகளை புதிதாக அறிந்து கொண்டேன். மருத்துவமனை போல இல்லாமல் காற்று வாங்க செல்லும் பூங்கா போல உள்ளது இந்த இடம் உள்ளது'' என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in