

சென்னை மாநகரத்தில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் வழங்கப்படாததால், பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளனவா என சரிபார்க்க நேற்று வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சென்னை மாநகரப் பகுதியில் மொத்தம் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் அமைந்துள்ள 3,624 வாக்குச் சாவடிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் புதன்கிழமை வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் வரவில்லை
இதைத் தொடர்ந்து, நேற்று பலர், தங்களது வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று தங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவா என்று சரிபார்த்துக்கொண்டனர். அதே வேளையில் பல வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படவில்லை. கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் 8 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள தனியார் பள்ளி, வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் 13 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச் சாவடி மையங்களுக்கு வரைவு வாக்காளர் பட்டியல்கள், மாநகராட்சி தேர்தல் துறை சார்பில் நேற்று மாலை நிலவரப்படி வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதனால் அவ்வாக்குச் சாவடி களுக்கு ஆர்வத்துடன் நேற்று வந்திருந்த பொதுமக்கள், அங்கு வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படாததால், ஏமாற்றத்து டன் திரும்பிச் சென்றனர். அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற் கான விண்ணப்பப் படிவங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன.
ஆவணங்களை கேட்கும் அலுவலர்கள்
பட்டாளம் பகுதியில் அமைந் துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்ட நிலையில், அப்பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல் தலைமை ஆசிரியர் அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டிருந் தது. அதை பார்க்க வந்த பொதுமக்களிடம், சம்மந்தப்பட்டவர் களின் ஆவணங்கள் ஏதேனும் காண்பித்தால் மட்டுமே வாக் காளர் பட்டியலைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரின் நேர்முக எழுத்தர் மூலமாக டிஆர்ஓ (தேர்தல்) செந்தாமரையிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.