

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று பேர வையில், சட்ட முன்வடிவுகள் நிறை வேற்றப்பட்ட நிலையில், பேரவை நிகழ் வுகள் தொடர்பாக தலைவர் பி.தனபால் தகவல்களை வெளியிட்டார். அப் போது அவர் பேசியதாவது:
ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட பேரவைக் கூட்டம் 36 நாட்கள் நடந்தது. அவைக் கூட்டம் 165 மணி 30 நிமிடங்கள் நடந்துள்ளது. ஜூன் 16-ம் தேதி பேரவையில் ஆளுநர் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத் தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடந்தது. இதில் ஆளுங்கட்சியில் 9 பேர், இதர கட்சியில் 14 பேர் என 23 பேர் 13 மணி 25 நிமிடம் உரையாற்றினர்.
இதில் இதர கட்சியினருக்கு கூடுத லாக 5 மணி 7 நிமிடங்கள் கூடுதலாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் அவையில் போதிய வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என வெளியில் பேட்டி அளித்துள்ளதால் இதைக் கூறுகிறேன்.
2016-17ம் ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்டத்தை ஜூலை 21-ம் தேதி நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் 4 நாட்கள் நடந்தது, இதில் 28 உறுப்பினர்கள் பங்கேற்று 16 மணி 52 நிமிடங்கள் உரையாற்றி உள்ளனர். ஆளுங்கட்சியினர் 12 பேர் 4 மணி 11 நிமிடமும், இதர கட்சியினர் 16 பேர் 12 மணி 41 நிமிடமும் பேசினர். இதர கட்சியினருக்குக் கூடுதலாக 8 மணி 30 நிமிடம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மானிய கோரிக்கை மீதான விவா தமும் வாக்கெடுப்பும் 22 நாட்கள் நடந்தன. இதில் 118 உறுப்பினர்கள் 52 மணி 9 நிமிடங்கள் உரையாற்றி உள் ளனர். ஆளுங்கட்சி சார்பில் 66 பேர் 19 மணி 9 நிமிடங்கள், இதர கட்சி யினர் 52 பேர் 32 மணி 50 நிமிடங்கள் பேசினர். இதர கட்சியினருக்கு கூடுதலாக 13 மணி 41 நிமிடம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. 4 ஆயி ரத்து 389 வெட்டுத்தீர்மானங்கள் வந்ததில், 3 ஆயிரத்து 255 அனுமதிக்கப்பட்டன.
திமுக உறுப்பினர் மஸ்தான் ஆயிரத்து 18 கேள்விகள், காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதரணி 659 கேள்விகள், திமுக உறுப்பினர் வி.ராமச்சந்திரன் 583 கேள்விகள், அதிமுக உறுப்பினர் சே.கருணாஸ் 488 கேள்விகள், திமுகவின் எஸ்.ஆர்.ராஜா 457 கேள்விகள் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.