Published : 03 Feb 2017 09:00 AM
Last Updated : 03 Feb 2017 09:00 AM

முதல்வராக நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும்: துரைமுருகன் தகவல்

முதல்வர் பதவியில் நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வரும் சூழ்நிலை வந்தால், அப்போது அவருக்கு உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் முதன் மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொட ரில் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக் கள் ஆகியோர் ஜெயலலிதா, சசிகலா வைப் புகழ்ந்து பேசினர். ஓரிருவர் தவிர வேறு யாரும் பெயரளவுக்குக் கூட முதல்வரைப் பாராட்டவில்லை. இதனால் ஓபிஎஸ் நெருக்கடியில் இருப்பதாக தகவல்கள் வெளி யாயின.

இந்த சூழலில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நேற்று முன்தினம் பேசும்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து, ‘‘நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லா சக்திகளையும் பெற்றிருக்க வேண் டும். உங்களுக்கு வேண்டிய சக்தி யைத் தர நாங்கள் தயாராக இருக் கிறோம். அந்த பக்கத்தில் இருந்து (அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக் காட்டி) எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

துரைமுருகன் இவ்வாறு கூறியது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக தொண் டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எழு திய கடிதத்தில், ‘‘சட்டப்பேரவையில், அவையில் இல்லாதவர்களின் புகழ் பாடுகின்றனர். முதல்வர் இதையெல் லாம் கவனித்தும், கவனிக்காத வகை யில் ஏதோ ஒரு நெருக்கடியில் ஆழ்ந் திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலை யில் ஸ்டாலின், துரைமுருகனின் கருத் துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக துரைமுருக னிடம் கேட்டபோது, ‘‘முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். அவருக்கு தேவையான சக்திகளைத் தருவோம் என சட்டப்பேரவையில் நான் பேசியது உண்மைதான். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?’’ என்றார்.

‘‘முதல்வர் பதவியில் ஓபிஎஸ் தொடர்வதில் பிரச்சினை ஏற்பட்டால் திமுக உதவுமா?’’ என கேட்டதற்கு, ‘‘ஆளுநர் உரையில் பாராட்டத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லையா என முதல்வர் ஓபிஎஸ் கேட்டதற்குப் பதி லாகநான் பேசினேன். இதை வைத்து, ‘நெருக்கடி வந்தால் ஓபிஎஸ்ஸுக்கு திமுக உதவி செய்யுமா’ எனக் கேட் டால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. நெருக்கடி வரட்டும் பார்க்கலாம். அப்போது எங்கள் முடிவை தெரிவிக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x