

தென்மேற்கு வங்கக் கடலுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக தஞ்சாவூரில் 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலடுக்கு சுழற்சி பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக் கட லுக்கும் இலங்கைக்கும் இடைப் பட்ட பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஞாயிறன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல் சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்றார்.