Published : 22 Jul 2016 06:15 AM
Last Updated : 22 Jul 2016 06:15 AM

நிதிப் பற்றாக்குறை ரூ.40,533 கோடி: தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை

5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள்; அரசு ஊழியர் சம்பள உயர்வு குறித்து பரிந்துரைக்க குழு

சட்டப்பேரவையில் 2016-17ம் ஆண் டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் புதிய வரிகள் எதுவும் போடப்பட வில்லை.

அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். அரசு ஊழியர் சம்பள விகிதம் குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்ததால் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அதற்காக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நிதியமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் காலை 11 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை தமிழக பொருளாதாரத்தை யும் பாதித்துள்ளது. இதனால் வரி வருவாய் குறைந்து மாநில நிதி ஆதாரங்களில் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் டில் ரூ.72,326 கோடியே 45 லட்சமாக மதிப்பிடப்பட்ட வணிக வரிகள், திருத்திய பட்ஜெட்டில் ரூ.67,629 கோடியே 45 லட்சமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டதால் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.6,636 கோடி யாக குறைத்து மதிப்பிடப்பட் டுள்ளது. குறு, சிறு விவசாயக் கடன் தள்ளுபடி, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களால் மாநிலத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன.

இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடி யாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட வருவாய் செலவினங்கள், திருத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 29 கோடியே 56 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 854 கோடியே 47 லட்சம் என திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.40,533 கோடி பற்றாக்குறை

திருத்திய பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,533 கோடியே 84 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.96 சதவீதமாகும். இது தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டம் 2003-ல் குறிப்பிட்டுள்ள வரையறைக்கு உட்பட்டே உள்ளது.

2015-16ம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.57 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பொருளா தார வளர்ச்சி விகிதம் 8.79 சதவீத மாக கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மாநில திட்டச் செலவு களுக்கான இலக்கு ரூ.60 ஆயி ரத்து 610 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளதால் மாநில பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘குடிமக்களின் மகிழ்ச்சியே அரசனது மகிழ்ச்சி. அவர்களது நலமே தனது நலம்’ என்கிறது அர்த்த சாஸ்திரம். இதை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வரு கிறார். அவரது எண்ணம், சொல், செயல் அனைத்தும் மக்கள் நலனை கருத்தில் கொண்டதாக உள்ளது. அவரது ஆற்றல்மிகு தலைமையால் தமிழகம் புகழின் உச்சிக்கு செல்லும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி ஊதிய விகிதங்களை மாற்றி யமைக்க அரசு அலுவலர்கள் குழு அமைக்கப்படும். குறு, சிறு விவ சாயிகளின் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ய நடப்பு ஆண்டில் ரூ.1,680 கோடியே 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் வான்வெளி பூங்கா அமைக் கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப் படும். திருமண உதவித் திட்டங் களுக்கு ரூ.703 கோடியும், சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2,800 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவு படுத்தப்படும். கிராமங்கள், ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள 1,000 கோயில்கள் புதுப்பிக்கப்படும்.

உலக வங்கி உதவியுடன் ‘அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ ரூ.745 கோடியே 49 லட்சத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. புனரமைக்கப்பட வேண்டிய 105 அணைகளுள் 66 அணை களில் பணிகள் ஏற்கெனவே தொடங் கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.258.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத் தடுப்பு திட்டம்

எளிதாக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்கான விரிவான வெள்ளத் தடுப்பு திட்டம் ஒன்றை அரசு தயாரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள் ளத் தடுப்பு நடவடிக்கைகள் ரூ.140 கோடியில் நபார்டு வங்கி உதவியுடன் மேற் கொள்ளப்படும். இந்நிதியில், வடிகால்களை அகலப்படுத்துதல், ஆறுகளின் கரைகள் பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x