

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அச்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதற்குப் பதிலாக ஏப்ரல் 2-ம் தேதி சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறவுள்ளதாக இப்போது அறிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதியும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அதிகாரியுமான ராஜேஸ்வரன் தலைமையில் நேற்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம். 28.02.2017-ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 1-ம் தேதி மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும், ஏப்ரல் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்லேண்ட்ஸ் திரையரங்கில் தேர்தல் நடைபெறும். அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக் கப்படும் என்று தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.