

வளசரவாக்கம் மருத்துவமனை சாலையில் ரூ.8 கோடியில் சமு தாய நல மைய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்ச மின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் வள சரவாக்கம் மண்டலம், 151-வது வார்டில், சின்ன போரூருக்கு உட் பட்ட வளசரவாக்கம் மருத்துவ மனை சாலையில் ரூ.8 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட சமுதாய நல மைய மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ அலெக்சாண்டர் ஆகியோர் பணிகளை தொடங்கிவைத்தனர்.
இந்த மருத்துவமனை 1 லட்சத்து 29 ஆயிரத்து 167 சதுர அடி பரப்பு கொண்டது. இந்த கட்டிடம் தரைத்தளம் மற்றும் இரு தளங்களைக் கொண்டது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.