

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி சம்பத்தின் விசாரணை அறிக்கை, தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி பரமக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தற்காப்பு செயலே என்று நீதிபதி சம்பத்தின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் விபரம் :
பரமக்குடிசில் கலவரம் வெடித்த போது, போலீசார் கலவரக்காரர்களை அடக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், தடியடி நடத்தினர். ஆனால் காவல்துறையின் எந்த ஒரு முயற்சியும் கலவரத்தை ஒடுக்க போதுமனதாக இல்லை.
கலவரக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியும், பெட்ரோல் குண்டுகளை எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். அத் தருணத்தில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடப்பட்டது.
நெருக்கடியான நேரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், காவல்துறையினர் ஒரு சார்பாக செயல்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் நீதிபதி சம்பத் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.