

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 2-ம் கட்டமாக போராட்டம் நடை பெற்று வருகிறது. 48-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு செய் தியாளர்களிடம் கூறியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அதில், தீர்வு கிடைக்காவிட்டால் தலை மைச் செயலகம் முன்பு போராட் டத்தில் ஈடுபடுவோம்.
ஜூன் 16-ம் தேதி டெல்லியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதிலும், இத்திட்டம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம். அனைத்து சங்கங் களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துவோம் என்றார்.