

அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாய்லாந்து நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இது தற்போது கிழக்கு திசையில் தாய்லாந்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச மாக 22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.