

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் இன்று நடக்கிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, இக்கூட்டம் நேற்று நடப்பதாக இருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடக்கிறது.
வழக்கமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அமைச்சர்கள் சொந்த மாவட்டத்தில் இருக்க வேண்டும் என உத்தர விடப்பட்டிருந்தது. அமைச் சரவை கூட்டம் நடப்பதால், அவர்கள் சென்னையில் தங்கி யிருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், அமைச்சரவை கூட்டம் தொடர்பாக புதிய தலைமைச் செயலர் பி.ராம மோகனராவ் நேற்றும் நேற்று முன்தினமும் பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரி களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.