Published : 10 Feb 2017 08:39 AM
Last Updated : 10 Feb 2017 08:39 AM

கிருஷ்ணராயபுரம் பெண் எம்எல்ஏ உட்பட 2 எம்எல்ஏ மாயமானதாக ஆட்கொணர்வு மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதாவைக் காணவில்லை என அவரது உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். குன்னம் எம்எல்ஏவைக் காணவில்லை என்று அத்தொகுதி வாக்காளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ப்ரீத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:

என் தந்தை எம்.வெங்கடாச்சலம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. எனது உறவினர் எம்.கீதா, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாகப் பதவி வகிக்கிறார். தற்போது, அவரது கணவரால்கூட அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது பெற்றோர் படுத்த படுக்கையாக உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராகப் பதவியேற்பதற் காக, எம்எல்ஏ கீதாவை சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அவரது ஜனநாயக ரீதியி லான சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீ ஸில் புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சசிகலா தரப்பினரின் சட்டவிரோதப் பிடியில் இருந்து எம்எல்ஏ கீதாவை உடனடியாக மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வாக்காளர் ஆட்கொணர்வு மனு

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனையும் காணவில்லை என்று கூறி அத்தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் இளவரசன், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

‘‘சிலர் தங்கள் அரசியல் சுயலாபத் துக்காக எம்எல்ஏ ராமச்சந்திரனை சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். இதுபோல மற்ற எம்எல்ஏக்களையும் அடைத்து வைத் துள்ளனர். அவர்களது செல்போன் களும் அணைத்து வைக்கப்பட்டுள் ளன. அவர்கள் சுதந்திரமாக மற்றவர் களுடன் பேசக்கூட அனுமதிக்கப்பட வில்லை. இதனால் தொகுதி மக்களால் மட்டுமின்றி அந்த எம்எல்ஏக்களின் உறவினர்களாலும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே குன்னம் எம்எல்ஏ உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x