

புதுவையில் போலி கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சம் அளவில் பொருட்களை வாங்கி மோசடி செய்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 7 இளைஞர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுவை ரெட்டியார்பாளையத் தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் விற்பனையகத்திற்கு அண்மையில் வந்த வெளிநாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள், கம்ப்யூட்டர், லேப் டாப் உள்ளிட்ட பொருட்களை வாங் கியுள்ளனர். இதற்கான ரூ.1.75 லட்சத்தை, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியுள்ளனர்.
அந்த கிரெடிட் கார்டு மூலம் பணத்தைத் தங்கள் நிறுவன கணக்கிற்கு வரவு வைத்த உரிமை யாளர், அவர்களிடம் அதற்கான ரசீதையும் வழங்கி, பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
இதேபோல், புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் செல்போன் விற்பனையகத்தில் அதே இளைஞர்கள், கிரெடிட் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி மோசடி செய்துள்ளனர்.
அண்மையில் கணக்கு பார்த்த போது, இந்த நிறுவனத்தினர் வெளிநாட்டினர் கிரெடிட் கார்டிலி ருந்து வரவு வைத்த தொகை வங்கி கணக்கில் வந்து சேராமல் இருந்தது தெரிந்தது. போலியான கார்டு மூலம் வெளிநாட்டு இளைஞர் கள் மோசடி செய்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் வணிகர் சங்கத் தலைவர் சிவசங்கரன் தலை மையில் செவ்வாய்க்கிழமை இரவு புதுவை காவல் துறை இயக்குநர் பி.காமராஜைச் சந்தித்து புகார் கொடுத்தனர்.
டிஜிபி காமராஜ் உத்தரவின் பேரில், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ் பெக்டர் பாஸ்கரன், ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, வியாபாரிகளிடம் மோசடி செய்த வெளிநாட்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் இதுதொடர் பாக கூறுகையில், "தென்ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்து மோசடி செய்த, அந்த வெளிநாட்டு இளைஞர்கள், 4 கடைகளில் பொருட்களை வாங்கி ரூ.10 லட்சம் அளவில் புதுச்சேரியில் மோசடி செய்துள்ளனர்.
அவர்கள் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வந்துள் ளனர். அது குறித்து விசாரித்தபோது, அதுவும் போலி பதிவெண் என்பது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காமிராவில் இவர்கள் முகம் பதிவாகியுள்ளது. அவர்களை விரைவில் பிடித்து விடுவோம்" என்று குறிப்பிட்டனர்.
வியாபாரிகள் இனிமேல், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வெளிநாட்டினருக்கு கிரெடிட் கார்டு மூலம் அல்லது ரொக்கமாக விற்பனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.