

வானகரத்தில் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் ‘வில்லியம்ஸ் ஹோம் அப்லையன்ஸ்’ என்னும் பெயரில் குளிர்சாதன கருவிகள், மின்சார அடுப்பு போன்றவற்றை தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் குளிர்சாதன கருவிகள் தயாரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்து தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் சுமார் 15 பேர் உடனே வெளியேறினர். இதனால் அனைவரும் காயமின்றி தப்பித்தனர்.
தீயை உடனே அணைக்க நடவடிக்கை எடுக்காததால், அருகே இருந்த ஒரு ரசாயன பொருட்கள் விற்பனை கடைக்கும், அதன் அருகே இருந்த மற்றொரு கடைக்கும் தீ பரவியது. 3 கடைகளில் பிடித்த தீயால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
ரசாயன கடையில் தீ பிடித்ததால் வானகரம், போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பூந்தமல்லி, அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்க ளில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 15 வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. குளிர்சாதன கருவிகள் தயாரிக்கும் பகுதியில் தீயை அணைப்பதற்கான எந்த கருவிகளுமே இல்லை என் பது விசாரணையில் தெரிய வந் துள்ளது. இந்த விபத்தால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருக்க லாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.