

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடந்ததால், மெரினா சாலை 4-வது நாளாக நேற்றும் மூடப்பட்டது. மாற்று சாலைகளில் வாகனங்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிந்துள்ளது. மேலும் குடியரசு தினவிழாவையொட்டியும் மெரினா சாலையில் வாகனங்கள் செல்ல 4-வது நாளாக நேற்றும் மூடப்பட்டது. இன்று குடியரசு தினவிழா நடைபெறவுள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர்.
இதற்கிடையே, சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின கொண்டாட்டத்துக்காக ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டினப்பாக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் கடற்கரையை இணைக்கும் மற்ற சாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல 4-வது நாளாக அனுமதி மறுக்கப் பட்டது. மெரினா, காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டிய வாக னங்கள் ராமகிருஷ்ண மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக மாற்றிவிடப்பட்டன. இதனால், மயிலாப்பூர், ராயப் பேட்டை, ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல், அண்ணா சாலையில் இருந்து கடற்கரை செல்ல வேண்டிய வாகனங்கள் வாலாஜா சாலை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கடற்கரை செல்ல வேண்டிய வாகனங்கள் கொடிமர சாலை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால், அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.