ஜெ. நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பெயர்ப் பலகை

ஜெ. நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பெயர்ப் பலகை
Updated on
2 min read

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் புதிதாக பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகிலேயே மெரினா கடற்கரையில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். ஆரம்ப நாட்களில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு மக்களும் அக்கட்சித் தொண்டர்களும் அஞ்சலி செலுத்த வந்து சென்ற நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது முதல் ஜெயலலிதா நினைவிடம் மேலும் முக்கியத்துவம் பெற்றது.

ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட் பெட்டியை வைத்து அஞ்சலி செலுத்தி எடுத்துச் சென்றார் நிதியமைச்சர் ஜெயக்குமார். சிறை செல்வதற்கு முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஓங்கி அடித்து சபதம் செய்து சென்றார் சசிகலா. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்துப் புதியக் கட்சியை அறிவித்தார் தீபாவின் கணவர் மாதவன்.

இப்படி அஞ்சலி செலுத்தும் நபர்களைக் கடந்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது புதிதாக பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in