Published : 02 Jul 2015 07:52 AM
Last Updated : 02 Jul 2015 07:52 AM

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு சாத்தியமில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழக அரசிடம் நிதி நெருக்கடி இருப்பதால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச் சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி லோக் சட்ட கட்சியின் மாநிலத் தலைவர் டி.ஜெகதீசன் உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இம்மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “நாடாளுமன்றத்தைப் போல சட்டப்பேரவை நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று விதிமுறைகள் எதுவுமில்லை என்று அரசு தரப் பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிர்காலத் தில் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வாய்ப்பிருக்கிறதா, இல் லையா என்று அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி வாதிடுகையில், சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் குறைந்த நாட்களே நடைபெறும். அதுவுமில் லாமல் சட்டப்பேரவை நிகழ்ச்சி களை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமானால் அதற்கான உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த நிறைய பணம் செலவாகும். தற் போது அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், இதற்கு சாத்திய மில்லை என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இவ்வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதிடுகை யில், “நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது போல சட்டப் பேரவை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு விரும்புகிறது. இருந்தாலும் நிதி நெருக்கடி காரணமாக அதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன. பெரும்பாலான மாநிலங் களில் அதன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, நிதி நெருக்கடி காரணமாக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என்பதற்கான காரணங்களை பதில் மனுவாக மூன்று வாரங்களுக் குள் தாக்கல் செய்ய வேண் டும். வழக்கு விசாரணை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படு கிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x