

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை `நம்பிக்கை’என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது.
நாகர்கோவிலில் செய்தியா ளர்களிடம் ஆன்மிக வழிகாட்டி ஸ்ரீஎம் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் வரை 6,500 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்த நடைபயணத்தை, விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறேன்.
ஆன்மிக நம்பிக்கை, அன்பு, அமைதி, நல்லி ணக்கம், ஒருமைப்பாடு ஆகியவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் முயற்சியாக இப்பயணம் அமையும்.
இந்த நடைபயணம் 12 மாநிலங்கள் வழியாக 15 முதல் 18 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும். ஒரு நாளில் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க இருக்கிறோம். மாலையில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடுவோம். இந்த நடைபயணத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகின்றனர், என்றார் அவர்.