சுவாதி கொலைக் குற்றவாளி கைது: காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு

சுவாதி கொலைக் குற்றவாளி கைது: காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு
Updated on
1 min read

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியைக் கைது செய்ததற்காக, காவல் ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.

சுவாதி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததற்கு முதல்வர் ஜெயலலிதா காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், தமிழக போலீஸ் சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in