

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான புதுச்சேரி என்ற திட்டமும் செயல்படுத்தப்படு கிறது. புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி, அனைத்து பஞ்சாயத்துகள், அரசுத் துறைகள், தனியார் சார்பில் இத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பழைய சட்டக் கல்லூரி - ஆம்பூர் சாலையில் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களுடன் இணைந்து அவ ரும் குப்பையை தனது கையால் எடுத்து சேகரித்தார். இதைப் பார்த்த ஆளுநர் மாளிகை அதிகாரி களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், துப்புரவுப் பணியாளர் களின் பாதுகாப்புக்காக தரமான கையுறைகளையும், காலணிகளை யும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். துப்புரவு ஊழியர் களுக்கு, ரோட்டரி போன்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் இலவசமாக உணவு வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் 2 வாரத்துக் குள் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள வாய்க்காலை சுத்தப் படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘இனிமேல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொள்ளப் படும். தூய்மையான புதுச்சேரி எங்கள் இலக்காகும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கம், ஆதரவு தரும் வகையில் நானும் இதில் ஈடுபடுவேன். நான் விளம் பரத்துக்காகவோ, செய்தி வர வேண்டும் என்பதற்காகவோ இப்பணியில் ஈடுபடவில்லை. புதுச்சேரி முழுவதும் தூய்மை யாக இருக்க வேண்டும் என்பதற் காகவே இதை செய்கிறேன். சிறப்பான முறையில் தூய்மைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என்றார்.