

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் நேரில் சந்தித்து அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, நேற்று பிற்பகல் சந்தித்தனர். அப் போது, ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு அனுமதி அளிக்கும் வகையிலான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு விரைந்து ஒப்பு தல் அளிக்க வேண்டும் என்று முறை யிட்டனர். குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அவசர சட்டம் கொண்டுவர ஆதரவு அளித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. ஒரே நாடு, ஒரே வரி என்பது சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி) வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஆனால், “ஒரே மொழி ஒரே கலாச்சாரம்” என்ற கோட்பாடு கூட்டாட்சிக்கு நல்லதல்ல.
காவிரி, முல்லைப்பெரியார், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, தமிழ்க் கலாச்சார குறியீடான ஜல்லிக்கட்டு என பல்வேறு பிரச்சினைகளை நாங் கள் எழுப்புகிறோம். தமிழ் கலாச் சாரமும் இந்திய கலாச்சாரம்தான். மாநிலங்களின் உரிமைகளையும் நலன்களையும் மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.