

தனி நபர் கின்னஸ் சாதனைக் காக 54 மணி நேரம் தொடர்ந்து யோகாசனங்களை மேற்கொள் ளும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.
மஹாமகரிஷி அறக்கட்டளை, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி சென்னை பல் கலைக்கழகத்தில் நேற்று காலை 9 மணியளவில் தொடங்கியது.
யோக ஆசிரியரும், வழக்கறி ஞருமான கே.பி.ரஞ்சனா 600-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை சுழற்சி முறையில் செய்து காண் பிக்க உள்ளார். சர்வதேச யோக தினமான ஜூன் 21-ம் தேதி மாலை 3 மணியளவில் இந்த யோகாசன நிகழ்ச்சி நிறைவடையும்.
நிகழ்ச்சியை சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரியின் டி.ஜி.பி. கே.பி.மகேந்திரன், சென்னை மாநகர காவல் துணை ஆணையர் லலிதா லட்சுமி, பாடகர் சீர்காழி சிவ.சிதம்பரம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இது குறித்து மஹாயோகம் அமைப்பின் பொறுப்பாளர் ரமேஷ் கூறும்போது, “யோகாவை ஒரு வாழ்வியல் நெறியாக பின்பற்றும்போது கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். பெண்களின் மன வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் உணவு, உறக்கம் தவிர்த்து 54 மணி நேரம் தொடர் யோகாசனங்களை செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் கே.பி.ரஞ்சனா ஈடுபட்டுள்ளார். இதற்கு முன் தனிப்பட்ட முறையில் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தொடர்ந்து 32 மணி நேரமும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் 50 மணி நேரம் 15 நிமிடங்களும் யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளனர். தற்போது ரஞ்சனா அந்த சாதனைகளை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.