Published : 19 Aug 2016 08:50 AM
Last Updated : 19 Aug 2016 08:50 AM

யுனானி மருத்துவம் தொடர்பான உருதுமொழி பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இடஒதுக்கீட்டுப் பிரிவினர் பயன் பெறும் வகையில், உருது மொழியில் உள்ள யுனானி மருத்துவப் பாடங் களை தமிழில் மொழிபெயர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப் பணிகளை விரைவாக மேற்கொள்ள நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 5 மாவட்ட மருத்துவமனைகள், 8 தாலுகா மருத்துவமனைகள், 27 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 24 உதவி மருத்துவ அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்வது குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2012 நவம்பர் 16-ம் தேதி வெளியிட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 4 இடங்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 7 இடங்கள், தாழ்த்தப் பட்டோருக்கு 10 இடங்கள், அருந்த தியருக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டன. இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், 2011 நவம்பர் 28-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பிற பிரிவி னரைக் கொண்டு அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிற பிரிவினரைக் கொண்டு காலியிடங்களை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.பழனிமுத்து வழக்கு தொடர்ந் தார். அதில், ‘‘மிகவும் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினர் உருதுமொழி தெரியாததால் இந்த பதவிகளுக்கு விண்ணப் பிப்பது இல்லை. எனவே, உருது மொழியில் உள்ள யுனானி மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இடஒதுக்கீட்டுக்கான இடங்களை, பிற வகுப்பினரைக் கொண்டு நிரப்புவது தொடர்பான அரசா ணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உதவி மருத்துவ அதி காரிகள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, உருதுமொழியில் உள்ள யுனானி மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘‘பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பயனடையும் வகையில், உருது மொழியில் உள்ள யுனானி மருத்து வப் பாடங்களை விரைவாக தமிழில் மொழிபெயர்க்க நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x