பணம், பொருள் வழங்குவதை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கோரிக்கை

பணம், பொருள் வழங்குவதை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கோரிக்கை
Updated on
1 min read

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங் கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத் துள்ளார்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக சென்றிருந்த ஸ்டாலின், நேற்று மாலை சென்னை திரும்பினார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி யாகி விட்டது. இதனால் ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் அணியும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக படங்கள், வீடியோ ஆதாரங்களுடன் தேர்தல் ஆணை யத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட முறைகேடு களுக்கு அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் சிலர் துணையாக இருப்பது குறித்தும் புகார் தெரிவித்தோம். அதன் அடிப் படையில் சில அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், பல இடங்களில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப் படுவதாக தகவல்கள் வருகின்றன. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in