சென்னையில் பிப்ரவரி 14-ல் மருத்துவ நுழைவுத் தேர்வு

சென்னையில் பிப்ரவரி 14-ல் மருத்துவ நுழைவுத் தேர்வு
Updated on
1 min read

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள், டிப்ளமோ, 6 ஆண்டு கொண்ட எம்சிஎச் படிப்புகளுக்கு 1,200 இடங்கள் உள்ளன.

இவற்றில் 600 இடங்கள் (50 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 600 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த 600 இடங்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in