Published : 31 Aug 2016 09:24 AM
Last Updated : 31 Aug 2016 09:24 AM

5 ஆயிரம் பார்வையற்றோருக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள்

பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை, சிவகங்கை மாவட் டங்களில் காதுகேளாமையை நீக்க ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்வர் வெளி யிட்ட அறிவிப்புகள் வருமாறு:

பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும். இதன்மூலம் அவர்கள் அதிக தூரத்தில் உள்ள பொருட்களை யும் உணர்ந்து கொள்ளவும், தங்கு தடையின்றி பயணிக்கவும் இயலும். இந்த ஆண்டு ரூ.1 கோடியே 58 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும்.

காதுகேளாமையை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் இக்குறைபாட்டை நீக்க முடியும். இதற்கென ஒரு முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு செயல் படுத்தப்படும். சென்னை, சிவ கங்கை மாவட்டங்களில் காது கேளாத குழந்தைகள் அதிக அள வில் உள்ளனர். எனவே, இந்த மாவட்டங்களில் குழந்தை பிறந்த வுடன் ஒரு சிறப்பு பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் 11 மாநகர தாய்-சேய் நல மருத்துவமனைகளிலும், சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார மருத் துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் இத்திட்டம் ரூ.3 கோடியே 30 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

புற உலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதம், நுண்ணறிவு திறன் மற்றும் மரபுவழி குறைபாட் டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பேச்சு, மொழித்திறனை மேம்படுத் திடும் வகையில் மாற்று தகவல் பரி மாற்ற முறை செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின்படி, தொடு திரையுடன் ‘ஆவாஸ்’ என்ற சிறப்பு மென்பொருளுடன்கூடிய கையடக்க கணினி (ஐ பேட்) மூலம் சிறப்புக் குழந்தைகளிடம் உள்ள தகவல் பரிமாற்ற குறைபாடு களை யப்படும். மேலும், சிறப்புக் குழந் தைகள் வகுப்பறையில் துடிப்புட னும் மிகவும் திறமையுடனும் கல்வி கற்கவும், மற்றவர்களுடன் உரை யாடவும் இத்திட்டம் பயனளிக் கும். முதல்கட்டமாக இந்த சிறப்பு வசதிகள் 416 குழந்தைகளுக்கு வழங்கப்படும். மேற்கண்ட திட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும்.

இவ்வாறு முதல்வர் ஜெய லலிதா அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x